எங்கள் மண்ணில் காலடி எடுத்து வைத்தால்..! புடினுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
ஜேர்மன் நீதித்துறை அமைச்சர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஜேர்மனியின் எல்லைக்குள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நுழைந்தால், அவர் கைது செய்யப்படுவார் என்று ஜேர்மன் நீதித்துறை அமைச்சர் மார்கோ புஷ்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜேர்மனின் எச்சரிக்கை
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் போர்க்குற்றம் புரிந்ததற்காக ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடியாணை பிறப்பித்ததை அடுத்து ஜேர்மன் நீதி அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜேர்மன் செய்தி நிறுவனமான Die Zeit வெளியிட்டுள்ள தகவலின்படி,புடின் ஜேர்மன் மண்ணில் காலடி எடுத்து வைத்தால் பெர்லின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு பிடியாணையை நிறைவேற்றும் என்று ஜேர்மன் தூதர் தெளிவுபடுத்தியுள்ளார்.