ரஷ்ய இராணுவம் தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்டால்..!புடின் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை
ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய இராணுவம் பற்றிய தவறான தகவல்களை வெளியிடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம் ஆயுதப் படைகள் பற்றிய தகவல்களின் சட்டப் பாதுகாப்பு இப்போது தன்னார்வலர்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகளின் முன் அமைக்கப்பட்ட பணிகளை முடிக்க உதவும் தன்னார்வ பட்டாலியன்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்கள் ஆகியோருக்கு எதிராக போலி செய்தி வெளியிடுபவர்களும் இனி இதில் தண்டிக்கப்படுவர்.
அவதூறு மற்றும் தவறான தகவல்கள்
ரஷ்யாவில் அதிகாரப்பூர்வ ஆயுதப்படைகள் குறித்து அவதூறு மற்றும் தவறான தகவல்கள் வெளியிடுவோருக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டிருந்தது.
தற்போது போலி செய்திகளை பரப்பும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட திருத்தத்தில் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த சட்டத்தின்படி ஒரு குற்றத்திற்கான தண்டனை 1,00,000 ரூபிள் முதல் 15 மில்லியன் ரூபிள் வரை அல்லது ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் பொதுப் பதவியில் இருப்பதில் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.