ரஷ்யா மீது ஜெர்மனி உளவுத்துறை குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான போரினால் ரஷ்யாவின் பொருளாதாரம் அடைந்துள்ள உண்மையான இழப்புகளை அந்நாட்டு அரசு மூடிமறைப்பதாக ஜெர்மனியின் வெளிநாட்டு உளவு அமைப்பு (BND) தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் 2025-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளதாக BND சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதாரத் தடைகள்
அதிகார பூர்வமாக 5.65 டிரில்லியன் ரூபிள் பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், உண்மையான பற்றாக்குறை 8.01 டிரில்லியன் ரூபிள்களைத் தாண்டியுள்ளதாக (சுமார் 30 பில்லியன் டொலர் கூடுதல்) அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவை ரஷ்யப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளன.
குறிப்பாக, ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதி வருவாயான எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது 'ஏகாதிபத்திய இலக்குகளுக்காக' நாட்டின் பொருளாதார எதிர்காலத்தையே பலிகொடுத்து வருவதாக உளவுத்துறை விமர்சித்துள்ளது.
இருப்பினும், இந்த வருவாய் சரிவு மற்றும் பற்றாக்குறை அதிகரிப்பு ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பாதிக்காத 'சாதாரண சிரமங்கள்' மட்டுமே என்று கிரெம்ளின் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam