வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஜேர்மனியின் செய்தி
ஜேர்மன் பெடரல் நாடளுமன்றம், ஏற்கனவே ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூன்றாம் நாடுகளின் குடிமக்களுடைய குடியிருப்பு மற்றும் புகலிட உரிமை தொடர்பான சட்டத்தில் முன்வைக்கப்பட்ட சட்டத்திருத்தங்களை அங்கீகரித்துள்ளது.
அது தொடர்பான வாக்கெடுப்பில் 371 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
அதனால் என்ன நடக்கும்?
இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளதால், ஏற்கனவே ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியிருப்பு உரிமை பெறுவதை எளிதாக்குதற்கான மாற்றங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
என்னென்ன சட்டத்திருத்தங்கள்?
ஜேர்மனியில் பாதுகாப்பான நிலைமை இல்லாமல் வாழ்ந்துவருபவர்கள் குடியிருப்பு உரிமை பெறுவது எளிதாகும்.
குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் இளைஞர்கள் தொடர்ந்து ஜேர்மனியில் வாழ வாய்ப்புக்கள் கிடைப்பது எளிதாகும்.
திறன்மிகுப் பணியாளர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் ஜேர்மனியில் இணைவது
எளிதாகும்.
புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு அவர்கள் விண்ணப்பங்கள்
தொடர்பில் விரைவாக பதிலளிக்கப்படும்.