ஜேர்மனில்15 வயது சிறுவனுக்கு சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்துள்ள நீதிமன்றம்
ஜேர்மனியில்(Germany) 15 வயது சிறுவன் ஒருவனுக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சக மாணவனை கொன்ற சிறுவன் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பயின்றுவந்த 15 வயது சிறுவன் ஒருவன், தன் சக மாணவனான இத்தாலி நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டதில் அந்தச் சிறுவன் உயிரிழந்தான்.
திட்டமிட்டு கொலை
குறித்த சிறுவனுக்கு 15 வயது என்பதால், இந்த வழக்கு மூடப்பட்ட அறைகளுக்குள் நடந்துவந்தது.
இந்நிலையில், அவன் தான் திட்டமிட்டு தன் சக மாணவனைக் கொல்லவில்லை என்று கூறியதுடன், அவனுடைய குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன் தரப்பு சட்டத்தரணிகள் அவன் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்று வாதிட்ட அதேவேளை, அரசு தரப்பு சட்டத்தரணிகள் அவன் திட்டமிட்டே கொலை செய்தான் எனவும் வாதிட்டுள்ளளனர்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட வூர்ஸ்பர்க் (Würzburg) நகர நீதிமன்ற நீதிபதி, அந்தச் சிறுவனுக்கு எட்டரையாண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam