ஜேர்மனியில் இடம்பெற்ற கார் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜேர்மனியின் (German) மாக்டேபர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்திற்குள் நழைந்த காரில் மோதியதில் பலியானோரின் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், விபத்தில் சுமார் 200இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்துமஸ் சந்தைக்குள் அதிவேகமாக நுழைந்த BMW கார், பொதுமக்கனை மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரின் ஓட்டுநர்
இதனை தொடர்ந்து, காரினை செலுத்தி சென்ற சவூதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான நபர், திரும்பி வந்து பொலிஸாரிடம் சரணடைந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் இருவர் விபத்தில் உயிரிழந்திருந்ததுடன், 60 முதல் 80 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தானது, ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என ஜேர்மன் நாட்டின் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், குறித்த விபத்து ஏற்பட்டமை தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை அந்நாட்டு தரப்பிலிருந்து வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |