சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு
சுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன செல்வந்தரான Karl-Erivan Haub உயிரிழந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
58 வயதான Karl-Erivan Haub சுவிஸர்லாந்து இத்தாலி எல்லையில் மலையேறும் பயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் இறுதியாக 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி ஒரு பையுடன் மலையேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவர் இறுதியாக தங்கியிருந்த ஹோட்டலில் காலையில் இருக்கவில்லை என்பதால், காணாமல்போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் அவரை தேடி வந்த நிலையில், ஒரு வாரத்தின் பின் குறித்த செல்வந்தர் உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் கைவிட்டனர்.
அத்துடன் அவரை தேடும் பணிகள் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி இரவு Karl-Erivan Haub இறந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.
Karl-Erivan Haub ஜேர்மன் மற்றும் அமெரிக்க நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர்.
Karl-Erivan Haub இறந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு அவரது சகோதரர்கள், நிறுவனம் மற்றும் மனைவி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே மனுதார் சமர்பித்த ஆதாரங்களால் திருப்தியடைவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Karl-Erivan Haub காணாமல் போனதை அடுத்து அவரது சகோதரான டெங்கொல்மேன் நிறுவத்தின் ஒரே தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Karl-Erivan Haub மற்றும் அவரது சகோதரர் இணைந்து 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.