பொருளாதார கொலையாளிகளுக்கு எதிராக ஜெனிவா விசாரணை! லக்ஷ்மன் கிரியெல்ல
பொருளாதாரக் கொலையாளிகளுக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் அமைப்பில் விசாரணைகள் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார்.
ஊடகமொன்றின் நேர்காணலின் போது இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடொன்றின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான செயற்பாடுகளை பொருளாதார குற்றங்களாக உலகம் வரையறுத்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம்
ஓரளவுக்கு நிலையாக இருந்த இலங்கையின் பொருளாதார அழிவு தொடர்பிலும் ஆட்சியில் இருந்தவர்கள் அவ்வாறான குற்றத்தையே இழைத்துள்ளனர்.
அந்நிய செலாவணி
அதே போன்று நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருந்த நேரம் அதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காமல் விட்டது மத்திய வங்கியின் நாணயச் சபை இழைத்த பாரிய தவறாகும்.
இவ்வாறான பொருளாதாரக் கொலையாளிகளும் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்