இலங்கைக்கு வெளியே சக்திவாய்ந்த தமிழ் புலம்பெயர் சமூகம்! தோல்வியை பகிரங்கமாக வெளிப்படுத்திய மொட்டுக்கட்சி முக்கியஸ்தர்
இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் திகழ்கிறார்கள் என நாமல் ராஜபக்சவின் விடுதலைக்காக ஜெனீவா சென்றதாக பேசப்பட்ட மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நெருங்கிய நண்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜெனீவா சென்று வந்த பின்னர் வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் அவர் தொடர்ந்து பேசியதாவது.
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா.. அநுர தரப்பிடம் சரத் வீரசேகர கேள்வி
ஜெனீவாவில் நடந்த பெனல் கலந்துரையாடல்
தமிழின படுகொலை மற்றும் தமிழீழத்திற்கான போராட்டத்தில் அவர்களின் பெரும் முயற்சியை நான் ஜெனீவாவில் 2022 இலும் பார்த்தேன். அந்த விடயத்தில் நாம் இப்போது தோற்றுப்போயிருக்கிறோம்.
நான் கலந்துகொண்ட ஒரு விவாத அரங்கில் (Panel Discussion), "துர்கா" என்ற பெண் தமிழின படுகொலை தொடர்பில் பேசினார். அவர் மிகவும் புத்திசாலி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர்.
அவரைப் போல மூன்று நான்கு தமிழ் யுவதிகள் பேசினார்கள். அவர்கள் ஒரு வகையில் "சிறிய லக்ஷ்மன் கதிர்காமர்" போன்றவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் அதாவது பிரிவினைவாத கோட்பாட்டில்.
அவர்களுடன் போட்டியிட அல்லது மோத வேண்டுமானால், நமது தேசியவாதக் முகாமிலிருந்தும் (Nationalist camp) ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், லண்டன் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்ற சிறந்த இடத்தில் பயின்ற, திறமையான, புத்திசாலித்தனமான, இந்த கருத்தியலைச் சரியாகப் புரிந்துகொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும்.
அது உடனடியாக நடக்கக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தே அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சில ஆளுமைகளை உருவாக்கினார்கள் .

உதாரணமாக இப்போது கனடாவில் கெரி ஆனந்தசங்கரி அமைச்சராக இருக்கிறார். இப்போது அவர்கள் இருக்கும் நாட்டில் இரண்டு மூன்று அரசியல் கட்சிகள் இருந்தால், அந்த எல்லா கட்சிகளிலுமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானர்கள் இருக்கிறார்கள்.
அதனால் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. எனவே இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) ஒரு விடயம்.
இதற்கு முகங்கொடுப்பது எப்படி என்பது குறித்து நாம் தனியாகப் பேச வேண்டும். பல்கலைக்கழகங்களில் பயின்ற, தேசியவாதச் சிந்தனையுள்ள புத்திசாலி இளைஞர்களாகிய உங்களுக்கு இதை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
இலங்கையின் மனித உரிமைகள் அறிக்கை என்பது ஒவ்வொருவரும் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.