ஐ. நாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
13 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
குறித்த தீர்மானத்திற்கு எதிராக, பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா போன்ற நாடுகள் வாக்களித்திருந்தன.
அதேவேளை, பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
