இலங்கையில் மரபணு மாறிய கொரோனா தொற்றுக்குள்ளானவர் தொடர்பான தகவல்

Independent Writer
in மருத்துவம்Report this article
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இலங்கையில் ஒருவர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டார்.
அவ்வாறு தொற்றுக்குள்ளானவர் கிரிக்கெட் வீரர் என சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய கொரோனா தொற்றுக்குள்ளான நபரிடம் இருந்து வைரஸ் பரவுவதனை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் கடந்த 4ஆம் திகதி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாட்டினுள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் அதிகரிப்பு உள்ள பிரதேசங்களில் தொற்றாளர்களின் மாதிரிகள் தொடர்ந்து சோதனையிடப்பட்டு வருகின்றது.
அதன் மூலம் இந்த மரபணு மாறிய வைரஸ் ஏற்படும் அவதானம் உள்ளதா என தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன் முதலாவது போட்டி நாளையதினம் காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 18 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
