வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (24.06.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அசாதாரண காலநிலை
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
முன் ஆயத்த செயற்பாடு
கடும் காற்றுடன் இடி, மின்னல் தாக்கங்களுடன் கூடிய அசாதாரண காலநிலையின் போது ஏற்படக் கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்கு முன்கூட்டிய ஆயத்தங்களுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.
அத்துடன் சில பகுதிகளில் ஏற்படும் காலநிலை மாற்றங்களாவன,
- அனுராதபுரம் - பிரதானமாகசீரானவானிலை
- மட்டக்களப்பு -பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்சாத்தியம்
- கொழும்பு -அடிக்கடி மழை பெய்யும்
- காலி அடிக்கடி மழை பெய்யும்
- யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழைபெய்யும்
- கண்டி- சிறிதளவில் மழை பெய்யும்
- நுவரெலியா சிறிதளவில் மழை பெய்யும்
- இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்
- திருகோணமலை- பிரதானமாக சீரானவானிலை
- மன்னார் - பிரதானமாக சீரானவானிலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |