பொலிஸ் மா அதிபர் விவகாரம் ஜனாதிபதி தேர்தலை குழப்பாது: வலியுறுத்தும் மூத்த தேர்தல் அதிகாரி
தேர்தல் காலங்களில், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்படும் கடிதங்கள், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், பொலிஸ் ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு அல்லது உயர் நீதிமன்றத்தை நாடுவதன் மூலம், ஒரு தற்காலிக பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியும் என்று தேசப்பிரிய கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்புகள்
அதேநேரம், பொலிஸ் மா அதிபரின் கடமைகளை ஒரு மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் தற்காலிகமாக நிறைவேற்றலாம். பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் மூலமாகவும் உத்தரவுகளை வழங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிர்வாக நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபரின் இடைநீக்கத்தால் ஏற்படக்கூடிய சாத்தியமான இடையூறுகளைத் திறம்பட தணிக்கும் என தேசப்பிரிய வலியுறுத்தினார்.
இந்தநிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் சட்டப்பூர்வ தன்மையை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள், மற்றும் வாதங்கள் தனிநபர்களின் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
எனவே, சவால்களுக்கு மத்தியிலும், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.
அத்துடன் தமது தொழில்முறை கருத்துப்படி, பொலிஸ் மா அதிபரை சுற்றியுள்ள பிரச்சினை தேர்தலை நடத்துவதற்கு தடையாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |