இறுதி நேரத்தில் அவசரப்பட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்
2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தற்போது தங்களது நிதிநிலை அறிக்கையை கையளித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், பிரசார நிதிச் சட்டங்களின்படி தமது நிதிநிலை அறிக்கையை அவர்கள் கையளித்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இதன்படி, தேர்தலில் போட்டியிட்ட 8,800 வேட்பாளர்களில், 7,846 பேர் தங்கள் நிதிநிலை அறிக்கையை ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் பிரசார நிதிச் சட்டக் காலக்கெடுவைக் கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்க கடைசி நிமிடங்களில் அவசரப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெள்ளிக்கிழமைக்குள் 493 கட்சிகள் தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையக தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போலவே, தேர்தல் ஆணையகத்திடம் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக பொலிஸ் தரப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தேர்தல் ஆணையகத்தின் தலைவர் கூறியுள்ளார்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam