பொதுத்தேர்தலை நடத்த 13 மில்லியன் ரூபாய்களே செலவு! நடப்பு பிரச்சினைக்கு அதன் மூலமே தீர்வு!
இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்குள் நடப்பு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்று ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவி;த்துள்ளார்.
எனவே புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத் தேர்தலுக்கு செல்வதே தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் கோருகின்றனர்
இந்தநிலையில்,ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் என குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விருப்பமான புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய முடியும் என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்த முடியாது என்று சிலர் கூறுகின்றனர். இது காலத்தைக் கொல்லும் வீண் காரணமாகும்
தேர்தலுக்கு 13 மில்லியன் ரூபாய்களே செலவாகும்
தேவையில்லாத விஷயங்களுக்கு அதிகப் பணத்தை செலவழிக்கும்போது இந்த நெருக்கடிக்கு தீர்வு காணபதற்கு இது ஒரு செலவாக இருக்காது என்று அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்;.
இந்தநிலையில் தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது இடைக்கால அரசாங்கம் போன்ற எந்தவொரு தீர்வுக்கும் ஜே.வி.பி உடன்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகவேண்டும். இல்லையென்றால்,அவர் வீட்டிற்கு செல்லும் வரை மக்கள் தங்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.