நாடு முழுவதும் கனமழை! இலங்கை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு..

Sri Lankan Peoples Climate Change Weather
By Erimalai Nov 26, 2025 02:32 AM GMT
Report

நாடு முழுவதும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதாக என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நிலவும் வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காற்றுச் சுழற்சி

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள்  ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும். இது இன்றைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும்.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய தினம் அல்லது 28.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும்.

நாடு முழுவதும் கனமழை! இலங்கை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு.. | General Climate Of Sri Lanka Weather Earning

இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றாகி தென் பகுதியூடாக ஊடறுத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை நோக்கி வருவது இதுவே முதல் முறையாகும்.

வங்காள விரிகுடாவின் வரலாற்றிலும் மேற்கு நோக்கி நகர்ந்த காற்றுச் சுழற்சி மீண்டும் கிழக்கு நோக்கி நகர்ந்து இன்னுமொரு காற்றுச் சுழற்சியுடன் இணைந்து பலமடைவதும் இதுவே முதல் முறை.

இதனால் நாடு முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.இந்தக் காற்றுச் சுழற்சியின் செல்வாக்கினுள் இலங்கை முழுவதும் உள்ளடங்கியுள்ளது.

ஒரு தாழ்வுநிலை/தாழமுக்கம்/ காற்றழுத்த தாழ்வு நிலை/ தாழ்வு மண்டலம்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்/ சூறாவளி/ சூப்பர் சூறாவளி எந்த திசை நோக்கி நகர்கின்றதோ அந்த பகுதியே அதன் காற்றுக் குவிப்பு மையமும் மழை வலயமும் ஆகும்.

அந்த வகையில் இந்த தாழமுக்கம் நகரும் போது இந்த காற்றுக் குவிப்பு மற்றும் மழை வலயத்தினுள் தென் மாகாணம், ஊவா மாகாணம், மிக முக்கியமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் அடங்குகின்றன. எனவே நாளை முதல் (26.11.2025)கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கத் தொடங்கும்.

கனமழை

எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிகக் கனமழையும், வேகமான காற்று வீசுகையும் நிகழும். இந்த நிலைமை எதிர்வரும் 29.11.2025 வரை தொடரும்.

இந்த நாட்களில் அதாவது எதிர்வரும் 28.11.2025 முதல் 29.11.2025 வரை பல பகுதிகளில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 350 மி.மீ. க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே இன்று கிடைத்துக் கொண்டிருக்கும் மழையினால் கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

today climate

எனவே எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் கன மழையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் தீவிரமான வெள்ள நிகழ்வுகளை ஏற்படுத்தும். எதிர்வரும் நாட்கள் வானிலை ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக நெருக்கடியான நாட்களாகும்.

ஆகவே பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறந்தள்ளாமல், போதுமான தயார்ப்படுத்தல் மற்றும் முன்னேற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கணிசமான அளவு தவிர்க்கலாம். புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசும்போது...

அறிவுறுத்தல்கள்

1. சகல இலத்திரனியல் பொருட்களினதும் மின் இணைப்பைத் துண்டித்து தகவல்களை அறிய தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி தகவல்களை அறிய வேண்டும்.

2. பாதுகாப்பான உறைவிடத்தின் உள்ளே இருக்கவும்.

3. பாதுகாப்பான இடம் தூரத்தில் உள்ளதாயின் முன்னரே சென்று போக்குவரத்து நெரிசல், வெள்ள அனர்த்தம், காற்றுப் பாதிப்பு என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவும்.

rain fall srilanka

4. வீடு அல்லது குடிசை உடைய அல்லது சரிய ஆரம்பித்தால் மெத்தைகள் மற்றும் போர்வைகளுடன் உறுதியான கட்டில் அல்லது மேசைக்கு கீழே சென்று உங்களைப் பாதுகாக்கவும்.

5. புயலின் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் கண்பகுதி தொடர்பாக அவதானத்துடன் இருத்தல் வேண்டும். காற்று வீழ்ச்சியடைந்ததும் சூறாவளி முடிவடைந்தது என முடிவெடுக்க வேண்டாம்.

வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய காற்று வேறு திசையில் இருந்து வீசலாம். உத்தியோக பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும்.

6. வாகனம் செலுத்திக் கொண்டிருந்தால் வாகனத்தை நிறுத்தும்போது கடலுக்கு தூரமாகவும் மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகள் இல்லாத இடத்தில் நிறுத்தவும் வாகனத்துள்ளே இருக்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசிய பின்...

1. பாதுகாப்பானது என அறிவிக்கும் வரை வெளியே செல்ல வேண்டாம்.

2. சமையல் வாயு வெளியேற்றத்தினைச் சரிபார்க்கவும். ஈரமாக இருப்பின் மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

நாடு முழுவதும் கனமழை! இலங்கை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு.. | General Climate Of Sri Lanka Weather Earning

3. ஆலோசனைக்காகவும், எச்சரிக்கைக்காகவும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

4. சேதமடைந்த மின்சார இணைப்புக்கள், பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள், தொடர்பாக அவதானத்துடன் இருங்கள். வெள்ளநீர்ப்பகுதிக்குள் செல்ல வேண்டாம்.

5. தேவையற்ற தொலைபேசி அழைப்புக்களைத் தவிருங்கள்.

வெள்ளப்பெருக்கு நிகழ்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய தயார்ப்படுத்தல் முறைகள்.

1. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

2. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலப்பகுதிகளில் பாதுகாப்பாக தங்குவதற்குரிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

3. முடிந்தால் உங்கள் பிரதேசங்களில் நாளை மாலைக்குள் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்களைத் துப்புரவாக்குதல்.

4. வெள்ளப்பாதிப்பின் அபாய அறிவிப்புக்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளல்.

நாடு முழுவதும் கனமழை! இலங்கை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு.. | General Climate Of Sri Lanka Weather Earning

5. வெள்ளப்பாதிப்புக் காலங்களில் பாதுகாப்பாக தங்கலாம் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு வெள்ளம் குறைவாக இருக்கும் போது சென்றடைதல் வேண்டும்.

6. அவசரகால பொதியை எடுப்பதுடன் மிக முக்கியமான ஆவணங்களை வெள்ளத்தினின்றும் பாதுகாத்தல்.

7. வெள்ளம் ஏற்பட்ட  பகுதிகளில் உள்ள மக்கள் சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை மிக விரைவாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லல்.

8. மின்சார, தெலைத் தொடர்பு இணைப்புக்களை துண்டித்தல்.

9. இடம்பெயர்ந்தோர் முறையான அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்கு திரும்பாமை.

10.தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதனால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடித்தல்.

3. வெள்ள நீர்ப்பகுதிகளுக்கு செல்லாது இருத்தல். மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, வரவிருக்கும் அனர்த்தத்தினால் எமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்போம்.

குறிப்பு: மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. தீவிர வானிலை தொடர்பான இந்த முன்னறிவிப்புக்களில் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

10 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US