தமிழர்களுக்கான பொது வேட்பாளர் காலத்தின் தேவை : சிறீதரன் உறுதி
தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S Sritharan) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் (KIlinochchi) உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் கைவிசேஷம் வழங்கி வைத்து பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அபிலாசைகள்
மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை.
ஆதரவளித்த பலர் தோல்வியடைந்துள்ளனர். வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை.
இதனால் தான் நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் பெரும்பாலானவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது.
சர்வதேச விசாரணை
தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியால் சொல்ல முடியும்.

மேலும், இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு (Kachchatheevu) இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது. வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் நாட்டில் உள்ள சகோதரர்கள் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகளை பாதிக்க விடமாட்டார்கள். எனினும், தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரமே இது” எனவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan