திருகோணமலையில் பாலின சமத்துவ அடிப்படை தொடர்பான நிகழ்வு
பாலின சமத்துவத்தின்மையின் அடிப்படையில் அதனை சந்திக்கும் அல்லது சந்திக்கும் அபாயத்தில் இருக்கும் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகளுக்கான பல்துறை சேவை வழங்குநர்களின் டிஜிட்டல் சேவை பட்டியலை தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (15) ஐக்கிய நாடுகள் மக்கள் நிதியத்தின் (UNFPA) ஒத்துழைப்புடன் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மேற்பார்வையில், திருகோணமலை மாவட்ட மகளிர் அபிவிருத்தி அதிகாரி ஸ்வர்ணா தீபானி ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யு.ஜீ.எம்.. ஹேமந்த குமாரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் கூறுகையில், தற்போதைய காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்முறைக்கு உள்ளாகும் அபாயம் மிக அதிகமாக உள்ளது.
டிஜிட்டல் சேவை
அதற்குரிய பொறுப்புள்ள நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு, தலையீடு மற்றும் விரைவு பதில்கள் மூலம் இந்த அபாயங்களை தடுப்பதற்கு மற்றும் நிகழக் கூடிய சேதத்தை மிக குறைவாகக் கொண்டு வருவதற்கு முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் முதன்மை நோக்கம் திருகோணமலை மாவட்டத்திற்குரிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்புடன் பல்துறை சேவை வழங்குநர்களின் டிஜிட்டல் சேவை பட்டியலை உருவாக்குவதே ஆகும்.
இந்நிகழ்வில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மகளிர் அபிவிருத்தி அதிகாரிகள், பொலிஸ் பிரிவின் மகளிர் பிரிவு அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள்,பெண்கள் தொடர்பான அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 13 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
