கொழும்பில் பொலிஸ் அதிகாரிகளின் மோசமான செயல் - 3 பெண்களுக்கு நேர்ந்த கதி
கொழும்பு, பொரளையில் மசாஜ் நிலையத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, 3 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு பணிபுரியும் மேலாளரையும் 4 பெண்களையும் மிரட்டி, 3 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்ற 2 கான்ஸ்டபிள்களில் ஒருவர், மேல் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளார்.
எனினும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் சிறப்பு கான்ஸ்டபிள்
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், பொலிஸ் சிறப்பு பணியக தலைமையகத்தில் பணி புரியும் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பியோடிய நபர், பொலிஸ் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.
பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.





15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
