இலங்கை சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மாணிக்கக்கற்கள் : வெளியான தகவல்
இலங்கை சுங்கத்தால் ஒப்படைக்கப்பட்டு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 19 மாணிக்கக்கற்கள் பொதிகளுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வசூலிக்கத் தவறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த பத்தொன்பது இரத்தினப் பொதிகள் 30 வருடங்களுக்கு மேலாக அதிகாரசபையின் பாதுகாப்பில் இருந்து 2021 பெப்ரவரி 19 ஆம் திகதி இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த பொதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் வசூலிக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்து.
இதேவேளை, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் சுமார் 67 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட மின் அடுப்பு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முற்றாக வீணாகியுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடுப்பு 2015ல் வாங்கப்பட்டதுடன், இரத்தினபுரி பிரதேசத்தில் மாணிக்க அருங்காட்சியகம் அமைப்பதற்கு சுமார் 22 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 2016 மற்றும் 2019 க்கு இடையில் கைவிடப்பட்ட அருங்காட்சியகத்திற்காக பணம் செலவிடப்பட்டுள்ளதுடன், தேசிய இரத்தினம் மற்றும் நகை ஆணையகத்தின் 2020 ஆண்டு அறிக்கையிலும் இந்த ஊழல் மோசடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.



