பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினராக தமிழ் பிரதிநிதி நியமனம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான கீதநாத் காசிலிங்கம் பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவை ஆகியவற்றுக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களின் மறுசீரமைப்பின் போது அவர் இந்த குழுக்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காசிலிங்கம் பொதுஜன பெரமுனவின் இரண்டு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதிநிதி என்ற நிலையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சமூகம் மத்தியில் கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்துவது தொடர்பில் செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பேரவைக்கு நியமிக்கப்பட்ட இளம் உறுப்பினர்
கீதநாத் காசிலிங்கம் இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது வடக்கு மற்றும் கிழக்கில் புனர்வாழ்வு விவகாரங்களுக்கான பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவைக்கு நியமிக்கப்பட்ட இளம் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
