பரீட்சைகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளை முன்கூட்டியே நடத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசாமில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தரம் பத்திலும், உயர்தரப் பரீட்சை தரம் பன்னிரெண்டிலும் நடத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சரிடம் யோசனையொன்றை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பல்கலைக்கழகம் செல்வதற்கு குறைந்தபட்சம் 14 மாதங்கள் காத்திருக்க நேரிடுவதாக கல்வி அமைச்சர் தம்மிடம் கூறியதாகத் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பாடசாலைகளுக்கு செல்லும் பிள்ளைகள் 21 வயதில் பட்டம் பெற்றுக்கொள்வதாகவும், அரசாங்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் பட்டம் பெற்றுக்கொள்ள 25, 26 வயதாகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் தரம் 10ல் சாதாரண தரப் பரீட்சையயும், தரம் 12ல் உயர்தரப் பரீட்சையையும் நடத்த வேண்டுமென முஸாம்மில் யோசனை முன்மொழிந்துள்ளதுடன், பிள்ளைகளின் பெறுமதிக்க காலத்தை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan
