மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவிக்கு கிடைத்துள்ள பெறுபேறு: நெகிழ்ச்சி சம்பவம்
திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.
அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளை பெற்றுள்ளார்.
மேலும் இந்த மாணவி மூளைச்சாவு அடைந்தபோது இறுதி தருவாயில் மற்றுமொரு உயிரை காப்பாற்றியுள்ளார் என கூறலாம்.
அதாவது மாணவி இறந்தபின் அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
