க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை என தகவல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு முடியாத நிலைமை உரவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தரப் பரீட்சையை கோவிட் காரணமாக மே மாதம் 23ம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இந்த பரீட்சையில் தோற்ற உள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் போதும் பரீட்சைகள் திணைக்களத்திடம் போதியளவு கடதாசிகள் கையிருப்பில் இருக்கவில்லை எனவும், அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் கடதாசி பெற்றுக்கொண்டே பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடப்பட்டதாக பரீட்சை திணைக்கள அதிகாரியொருவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடதாசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan