மாணவர்கள் 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு: கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்
நாட்டின் பாடசாலை மாணவர்கள் 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாணவர்களுக்கு 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05.12.2023) கல்வி அமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம்
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிககையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின் பிரகாரம் இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |