உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பு
உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற 360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
2023/ 2024ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் பரீட்சையில் சிறப்பு சித்திப்பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப்பரிசில்களை சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன வழங்கி வைத்தார்.
360 மாணவர்கள்
இந்நிகழ்வு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி. ரோஷன் தலைமையில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 36 மில்லியன் ரூபா நிதியிலான பணப் பரிசில்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
















இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri
