வா்த்தமானியை மாத்திரம் வெளியிடும் நுகா்வோர் பாதுகாப்பு அதிகாரசபையை மூடிவிடுங்கள்: விசேட கோரிக்கை
நுகா்வோா் பாதுகாப்பு அதிகாரசபையை மூடிவிடவேண்டும். அத்துடன் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை செய்யவேண்டாம் என்று நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் அசேல சம்பத் கோாிக்கை விடுத்துள்ளார்.
இதனை வலியுறுத்தி நாளையதினம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்னால் ஆா்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவா் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
வா்த்தகர்கள், தாம் விரும்பிய வகையில் பொருட்களின் விலையை அதிகரித்தால், நுகர்வோா் பாதுகாப்பு அதிகாரசபை எதற்காக இயங்கவேண்டும் என்று அவா் கேள்வி எழுப்பினார்.
நுகர்வோா் பாதுகாப்பு அதிகாரசபை,வா்த்தமானியை வெளியிடவும் அதனை ரத்துச்செய்யவும், சுற்றிவளைப்புக்களையும் மேற்கொள்ளவும் மாத்திரம் செயற்படமுடியாது. மாறாக நுகர்வோர் சார்பாக செயற்படவேண்டும்.
அரிசி,சீனி உட்பட்ட பல பொருட்களின் விலையை, வா்த்தா்கள், தமக்கு தேவையான வகையில் அதிகரித்து வருகின்றனர்.
விரைவில் மதுபானங்களின் விலையை உயா்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று சம்பத் குறிப்பிட்டாா்.
இந்தநிலையில் சத்தோச நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சா் பந்துல குணவா்த்தன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனை மேற்கொள்ளவேண்டாம் என்று அவாிடம் கோருவதாக அசேல சம்பத் குறிப்பிட்டார்.
இதேவேளை நுகா்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னால் நாளை இடம்பெறவுள்ள .ஆா்ப்பாட்டத்தின்போது தற்போது தமது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் ஆசிாியா் சங்கங்கள், எாிபொருள்துறை தொழில் சங்கங்களும் பங்கேற்கவேண்டும் என்று அசேல சம்பத் கோாிக்கை விடுத்தார்.
இது அனைவரின் பசியுடன் தொடா்புடைய பிரச்சனை என்பதால், குறித்த தொழிற்சங்கங்களும் நாளைய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்றும் அசேல சம்பத் கோாியுள்ளாா்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
