கெஹெலியவின் அமைச்சு பதவி குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பதவி விலகல்
இந்நிலையில் சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியதுடன் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (06,02.2024) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri