திசை மாறும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: படை வீரர்களை தயார்ப்படுத்தும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையேயான போரில் களமிறங்குவதற்கு 2000 அமெரிக்க வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமெரிக்க இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதல் அதிகரிக்ககூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடக்கும் போரில் அமெரிக்க வீரர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல் படைகளுக்கு ஆயுதம் அல்லது மருத்துவ உதவி போன்ற பல்வேறு உதவிகளை அமெரிக்க படை வீரர்கள் வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க படைகளின் ஆதரவு
மேலும் அவசியம் ஏற்பட்டால் பல்வேறு இடங்களைப் பிடிப்பது, தாக்குதல் நடத்துவது, பாதுகாப்பு வழங்குவது போன்ற பணிகளிலும் இஸ்ரேலுக்கு அமெரிக்க படைகள் ஆதரவாக இருக்கும் என நம்பப்படுகிறது.
அமெரிக்க படைகள் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி சிரியா, எகிப்து, காசா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன்படி அமெரிக்க படைகள் அங்கே குவிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு போரில் மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவும் வகையில் அவர்கள் செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா தன் இராணுவக் கப்பலை அனுப்பி இருந்தாலும், நேரடியாக களத்தில் இறங்கவில்லை.
நேரடியாக களத்தில் அமெரிக்கா
எனினும் தற்போது அமெரிக்க இராணுவம் நேரடியாக களத்தில் இறங்க உள்ளதால் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையேயான மாபெரும் போராக இது உருவெடுக்கும் என சர்வதேச தரப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.
தனது இராணுவ வீரர்களை தயார் நிலையில் இருக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த உத்தரவின் பேரிலேயே அவர்களுக்கு இந்த அறிவிப்பு சென்றுள்ளதாக அமெரிக்க தரப்புக்கள் கூறுகின்றன.
இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலில் போர் உச்சமடைந்துள்ளதால் இந்த அறிவிப்பை தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதற்கு தயாராகிவிட்டது என கருதப்படுகிறது.
