மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைமுறைக்கு வந்த இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்
ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல்(Israel) - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் படைத்தரப்புக்கள் கடந்தாண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில் 46ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போர் நிறுத்தம் ஒப்பந்தம்
இந்த நிலையில், ஓராண்டுக்கும் மேலான போரை நிறுத்த, கடந்த வாரம் அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டன.
இதன்படி, போர் நிறுத்தக் காலமான 6 வாரங்களுக்கு இருதரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பணயக் கைதிகள் குறித்த விவரங்களை வெளியிடாவிட்டால் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே, பணயக் கைதிகளின் விவரங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் வழங்கியதையடுத்து, இன்று(19) நண்பகல் 12 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டிய நிலையில், சுமார் 3 மணிநேர தாமதத்துக்குப் பின்னர் பிற்பகல் 2.45 மணியளவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, இரு நாடுகளின் பல பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, காலையில் நடந்த 2 மணிநேரப் போரில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் தரப்பினர் 33 பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் தரப்பினர் 737 பாலஸ்தீனர்களையும் விடுவிக்கவுள்ளனர்.
இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உட்பட 3 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
