தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கூட்டத்தில் இருந்து வெளியேறியதற்கு இதுவே காரணம்..! கயேந்திரகுமார் எம். பி
கயேந்திரகுமார் எம். பி தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி ஒருதலைப் பட்சமாக இடம்பெறும் செயற்பாடுகள் காரணமாக குறித்த கூட்டத்திலிருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று(07.05.2026) கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு செல்லாமை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என விரும்பி அதற்கான செயல்பாடுகளை கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டோம்.
தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் குறித்த அழைப்பை விடுத்தோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக தமிழரசுக் கட்சியும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத நிலையில், சட்டத்தரணிகள் பேரவை தாங்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப் போவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் தெரிவித்தார்கள்.
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஏற்பாடு செய்த கலந்துரையாடலுக்கு சென்றோம்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பிரதிநிதிகள் மூவர் கலந்து கொள்ளலாம் என முதல் அழைப்பு கிடைத்தது சென்றோம்.
குறித்த கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி சுமந்திரன் நிபுணர் குழு சார்பில் இருவரை அழைப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும் என பெயர்களை குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தார்.
அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை கூட்டத்துக்கான அழைப்பு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பங்குபெற்றல் என குறிப்பிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.