'டித்வா' நாடாளுமன்ற தேர்வுக் குழு தலைமை எதிர்க்கட்சிக்கு வேண்டும்: கயந்த கருணாதிலக்க எம்.பி கோரிக்கை
'டித்வா' சூறாவளி பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்வுக் குழவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமானது. அதில் உரையாற்றும் போதே இந்த வேண்டுகோளை விடுத்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
தலைமை பதவி
'டித்வா' சூறாவளியை முகம்கொடுப்பதற்காக முன்னாயத்தங்கள் இல்லாமை, இயற்கைப் பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் பூரணமாக ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.
இதை அரசாங்கம் நேர்மையாக முன்னெடுக்குமென்றால் அதன் தலைமை பதவி எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும்.கடந்த காலங்களிலும் அவ்வாறே நடந்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி.யான அனுராத ஜயரத்னவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட இந்த பிரேரணையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 25 எம்.பி க்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.