ஜனாதிபதியின் கருத்துக்களை சுற்றறிக்கைகளாக ஏற்று கொண்டதன் விளைவு!
நாட்டில் இன்று அரசாங்கம் அல்ல அச்சாறுவையே காணமுடிவதாக நாடாளுமன்ற உறுப்பினர், கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
அரசாங்கம், தற்போது தமது தவறுகளை அதிகாரிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முனைகிறது. இதுவே “சிஸ்டம் சேஞ்” என்ற அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கருத்துக்களையே சுற்றறிக்கைகளாக செயற்படுத்தவேண்டும் என்று 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி, அரச அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தார்
எனவே ஜனாதிபதியின் கருத்துக்களை சுற்றறிக்கைகளாக ஏற்றுக்கொண்டு செயலாளர்கள் செயற்பட்டதன் காரணமாகவே நாட்டுக்கு தற்போது பின்னடைவு நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை போதுமான அரிசியை கொண்டிருந்த இலங்கையின் விவசாயத்துறையில் மாற்றங்களை கொண்டு வருவதாக கூறிய அரசாங்கம் தற்போது பர்மாவில் இருந்து ஒரு லட்சத்து 50ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் நடைமுறைப்படுத்திய எரிபொருள் சூத்திரத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளமையால், நாட்டில் எரிபொருட்களின் விலையும் குறைந்திருக்கும்.
எனினும் இன்று சர்வதேச சந்தையில் விலை குறைந்தநிலையில் இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாக கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்தாலும் அரசாங்கம் பிரதேசசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களை பிற்போடுவதற்கான செயற்பாடுகளையே மேற்கொண்டிருப்பதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
