உலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள கௌதம் அதானி
உலக பணக்காரர்களின் பட்டியலில் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியல்
போர்ப்ஸ் (Forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்.வி.எம்.எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4ஆவது பெரிய பணக்காரராக இருந்துள்ளார்.
அதன் பின், குறுகிய நாட்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
எலான் மஸ்க் பிடித்துள்ள இடம்
போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும், எல்.வி.எம்.எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (12.38 லட்சம் கோடி) 3ஆவது இடத்திலும் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.9 லட்சம் கோடி) 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.3 பில்லியன் டொலர் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5ஆவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8ஆம் இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
