விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் இந்திய புலனாய்வு நிறுவனம்
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம், வெளிநாட்டு கப்பலில் இருந்து ஐந்து ஏகே 47 துப்பாக்கிகளைக் கைப்பற்றி விசாரணையின் ஒரு பகுதியாக பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்கின்றது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கேரள கடற்கரையில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின், பல்வேறு பிரிவுகளையும் இந்திய தேசிய நிறுவனம் செயல்படுத்தியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி, இலங்கை மீன்பிடி கப்பலான ரவிஹான்ஷியை இந்திய கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்தினர், அதில் இருந்து 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில்,முதலில் இலங்கைப் பிரஜைகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் என்றும், தடை செய்யப்பட்ட அந்த அமைப்பை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளதாக இந்திய தரப்புகள் தெரிவித்துள்ளன

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 18 நிமிடங்கள் முன்

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
