இடைநிறுத்தப்பட்டுள்ள எரிவாயு விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு (Photo)
நாளை முதல் மீண்டும் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மூன்று நிபந்தனைகளின் கீழ் குறித்த கொள்கலன்கள் விநியோகம் செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த பல நாட்களாக எரிவாயுவுடன் தொடர்பான பல்வேறு வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நாட்டில் பல தொழிற்துறைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், உணவக உரிமையாளர்களும் கடும் சிக்கல் நிலையை எதிர்நோக்கியிருந்தனர்.
மேலும், சமைத்த உணவுகளை கடைகளில் இருந்து பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலை ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri
