வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு: பொலிஸில் முறைப்பாடு(Photos)
வவுனியா - மகாறம்பைக்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (25) அதிகாலை நத்தார் பிரார்த்தனைக்காகத் தேவாலயம் செல்வதற்காக வீட்டுத்தலைவரால் நீர் கொதிக்க வைத்த பின்னர் அடுப்பினை நிறுத்தி விட்டு தேவாலயத்திற்குச் சென்றுள்ளனர்.
தேவாலயத்திற்குச் சென்று விட்டு இன்று அதிகாலை 1.45 மணியளவில் வீட்டிற்கு வந்து சமையல் அறையைப் பார்த்த போது எரிவாயு அடுப்பு வெடித்திருப்பதை அவதானித்தமையை அடுத்து உடனடியாக எரிவாயு சிலின்டர் இணைப்பினை கழற்றி காஸ் சிலின்டரினை பாதுகாப்பாக வெளியில் எடுத்து சென்றுள்ளமையால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் இன்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் 05வது காஸ் அடுப்பு சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ருவன்புர பகுதியில் நத்தார் பண்டிகைக்கு சமைத்துக்கொண்டிருக்கும் போது எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
இச்சம்பவம் ருவன்புர பகுதியில் இன்று (25) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அடுப்பு சேதமடைந்துள்ளது.
குறித்த அடுப்புடன் இணைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரினை ஒரு மாதத்துக்கு முதல் ஹட்டன் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கொள்வனவு செய்ததாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மற்றும் கைரேகை அடையாளப்பிரிவு ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.




அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
