நாட்டின் சில பகுதிகளில் சமையல் எரிவாயு இன்றி தவிக்கும் மக்கள்
நாட்டின் சில பகுதிகளில் சமையல் எரிவாயு கையிருப்பு இன்மையால் பல கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் மற்றும் பெருந்தோட்டங்களை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் பல நாட்களாக லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படாததால் லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுமார் ஒரு மாத காலமாக எரிவாயு கையிருப்புகளை விற்பனை பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு
மேலும், அட்டவணைக்கமைய, எரிவாயு இருப்புக்களை விநியோகிக்காத காரணத்தினால் இந்த எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பிரதேச எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை நிறுவனங்களுக்கு சொந்தமான வெற்று எரிவாயு சிலிண்டர்களை கூட நிறுவனம் எடுத்துச் சென்றதாகவும், அதற்கு மாற்றீடாக சிலிண்டர்கள் பல வாரங்களாக வழங்கப்படவில்லை என்றும் விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் லிட்ரோ எரிவாயு கிடைக்காமல் ஹட்டன் நகரில் உள்ள பல எரிவாயு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளன.