வெல்லாவெளியில் எரிபொருள் நிலையம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் எரிபொருள் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் நிலையம் ஒன்று வெல்லாவெளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு அருகில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யுத்ததிற்கு பின்னர் இப்பகுதியில் எரிபொருள் நிலையம் ஒன்றின் தேவை தொடர்பில் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டிய நிலையில் தற்போது எரிபொருள் நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் போரதீவுப்பற்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள், வாகன உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் நன்மையடையவுள்ளனர்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam