தகனசாலைகளிலும் தாக்கத்தை செலுத்தும் எரிவாயு தட்டுப்பாடு
நாட்டில் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டு நிலைமையானது தகனசாலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமான கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க முடியாத நிலை சில இடங்களில் உருவாகியுள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிணவறைகளில் தொடர்ந்தும் வைத்திருக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா ஆகிய பகுதிகளில் கோவிட் தொற்று காரணமாக கடந்த 30ம் திகதி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சடலங்கள் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட்ட போதிலும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சடலங்களை எரிப்பதற்கு முடியாத நிலையினால் உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்வூட், கொட்டகலை மற்றும் தலவாக்கலை தகனசாலைகளில் இந்த நிலைமை காணப்படுவதாகவும்,இதனால் கூடுதல் பணத்தை செலுத்தில் நுவரெலியா தகனசாலையில் சடலங்களை எரிக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
