எரிவாயு அடுப்பு தீப்பற்றி வெடிக்கும் காட்சி: வெளியான சிசிடிவி காணொளி
ராகம பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றதாக கூறப்படும் எரிவாயு அடுப்பு தீப்பற்றி சிறியளவில் வெடிக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த சம்பவம் சமையலறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
காணொளியில் பெண்ணொருவர் சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றமை தெளிவாக பதிவாகியுள்ளது.
எனினும் இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதுடன், இது தொடர்பில் நாட்டில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam