தை முதல் நாளே விலையேற்றம்! பொது மக்களுக்கு அடுத்த சுமை
நடைமுறைக்கு வரவுள்ள புதிய வற் (VAT) வரி திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி 1 முதல் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு மீதான வற் வரி மேலும் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயுவுக்கு துறைமுகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் விதிக்கும் 2.5% வரி நீக்கப்பட்டு 15.5% வீதத்தால் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
500 ரூபாவினால் அதிகரிப்பு
அதன்படி லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 3565 ரூபாவிற்கு விற்கப்படும் நிலையில் நாளைமுதல் 500 அதிகரிக்கப்பட்டு 4065 ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடுத்தர குடும்பத்தினருக்கு பாதிப்பு
இவ்வாறு எரிவாயு விலையின் இந்த சடுதியான அதிகரிப்பினால் உணவுப்பொதிகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதோடு பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
குறிப்பாக எரிவாயு விலை அதிகரிப்பினால் சிறிய, நடுத்தர குடும்பத்தினர் மற்றும் நகர்புறங்களில் தொழில்புரிவோர் மற்றும் கூழித்தொழிலாளிகளும் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.
கடந்த ஒக்டோபர் மாதம் 04 திகதி எரிவாயு விலைகள் இறுதியாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
