சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து விளக்கம் கோருமாறு அமைச்சர் பணிப்புரை
சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து விளக்கம் கோருமாறு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
லாப் சமையல் எரிவாயு நிறுவனம் எரிவாயு கொள்கலன்களின் விலையை அதிகரித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் |
அமைச்சர் பணிப்புரை
12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 6850 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 2740 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் விலை உயர்த்தப்பட்டது என்பது குறித்து நிறுவனத்திடம் விளக்கம் கோருமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களை தேவையின்றி சேகரிப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் மக்களிடம் மேலும் கோரியுள்ளார்.



