சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுமா?
சமையல் எரிவாயு விலை குறைந்தபட்சம் 400 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு நிறுவனங்கள் நஷ்டமடைவதனை தடுப்பதற்கு குறைந்தபட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 400 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவிற்கு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை நிர்ணயம் குறித்து தீர்மானிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழு நேற்றைய தினம் கூடியதாகவும் இந்தக் குழுவிற்கு பந்துல குணவர்தன தலைமை தாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்த அமரவீர, டலஸ் அழப்பெரும, உதய கம்மன்பில, லசந்த அழகியவன்ன மற்றும் எரிபொருள் விற்பனை நிறுவனப் பிரதானிகள் உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
டொலரின் விலை உயர்வு மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணிகளின் அடிப்படையில் விலைகளை உயர்த்த நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam