யாழில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி திருட்டு
யாழ்ப்பாண நகரில் எரிவாயு கொள்கலனை கொண்டு சென்றகுடும்பத்தலைவர் ஒருவரை வழிமறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு கொள்கலன் மற்றும் பணம் என்பன கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு (23) இந்த வழிப்பறிக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்ற குடும்பத்தலைவரை மறித்த நால்வர் தம்மை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனத் தெரிவித்து அவரை மிரட்டி அவர் எடுத்துச் சென்ற எரிவாயு நிரப்பிய கொள்கலன் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அபகரித்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்களிலேயே கந்தர்மடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து எரிவாயு நிரப்பட்ட கொள்கலன்
மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri