நாட்டில் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை: ஏமாற்றதுடன் வீடு திரும்பிய பொதுமக்கள்
நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவை மக்கள் பெற்றுக் கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு இல்லாமல் மக்கள் சிரமம்
எனினும், எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என இன்றும (19.02.2026) பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலையும் நிலவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறைவான இறக்குமதி
எரிவாயு விநியோகம் குறைவாக இருப்பதாலும், தேவை அதிகமாக இருப்பதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக கூறப்படுகிறது. இது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நுவரெலியாவில் பிரதான இடங்களில் வழமையைவிடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

அதே போன்று, இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் முழுமையாக விநியோகிக்கப்படாமல், முடங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன் விளைவாக மக்கள் இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாமல் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
[

வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri