இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடி! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
இலங்கையில் பல எரிவாயு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிவாயு துறையில் வேறு பல வர்த்தக நிறுவனங்கள் இருந்திருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சிந்தித்து அரசாங்கம் இந்த வருடம் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வர்த்தக நிறுவனங்கள் தமது தொழிலை விரிவுபடுத்துவதற்காக குழம்பிய குட்டையில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக துறையில் ஒரு பிரச்சனை உள்ளது. நாம் பொய் சொல்ல முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டும். எரிவாயு வர்த்தகத்தில் இருப்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்கிறார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கிறது.
நாமும் எப்படியாவது இன்னும் நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களை எரிவாயு தொழிலில் சேர்க்க வேண்டும். அப்படி நடந்தால் இந்தக் கதையை நாம் கேட்க வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

ஜாக்கெட் பாக்கெட்டில் வைத்த லொட்டரிச்சீட்டை மறந்த ஜேர்மானியர்: சமீபத்தில் கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
