வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 எரிவாயு கொள்கலன்கள்
ஹோமாகமை குலசிறி குமாரகே மாவத்தையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லாஃப் எரிவாயு கொள்கலன்களுடன் கணவன், மனைவி உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகமை தலைமையக பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களின் வீட்டில் இருந்து, 12.5 கிலோ கிராம் கொள்ளவு கொண்ட 30 கொள்கலன்கள், ஒரு 5 கிலோ கிராம் கொள்ளவு கொள்கலன் மற்றும் 19 வெற்று கொள்கலன்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதிக விலைக்கு லாஃப் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri