லிட்ரோ எரிவாயு கொள்கலன் விநியோகம் ஆரம்பம்
எரிவாயு கொள்கலன் விநியோகம் நாளை (31) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா அறிவித்துள்ளது.
50,000 வீட்டு எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
விநியோகிக்கப்படும் எரிவாயு கொள்கலன்
விநியோகத்தில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு கொள்கலன்கள் அடங்கும்.
லிட்ரோ கேஸ் லங்காவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இப்போது கிடைக்கும் புதுப்பிக்கப்பட்ட பங்குகளுடன் டீலர் பட்டியலில் உள்ள தகவல்களை நுகர்வோர் பெறலாம்.
நிறுவனம் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை மே 24 முதல் இன்று வரை இடைநிறுத்தியுள்ளது. 3500 மெட்ரிக் டன் எல்பி எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டதே இதற்குக் காரணம்.
எவ்வாறாயினும், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் வகையில் கப்பல் இன்று காலை இலங்கையை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசி ஒரு கிலோ ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கலாம்! வெளியானது செய்தி |





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
