இலங்கையின் கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய மாட்டேன்! விரைவில் இலங்கை செல்வேன் - அமைச்சர் கரி ஆனந்தசங்கரி(Video)
இலங்கைக்கு வருவதற்கான முற்சிகளை மீண்டும் எடுப்பதாக அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு நான் போக வேண்டும் என இருந்தமைக்கான காரணம், தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக இருந்தால் நாம் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கதைக்க வேண்டும்.
மீண்டும் நான் அங்கு செல்ல முயற்சிகள் செய்வேன். ஆனால் இலங்கை அரசாங்கம் எனது விஜயத்திற்கு தடை செய்ததற்கு என்னுடைய கருத்தின் படி, நான் இலங்கை சென்று வந்து எவ்வாறான கருத்துக்களை பேசியிருப்பேன் என்பதை யோசித்திருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான செவ்வியை உள்ளடக்கி வருகிறது இந்த காணொளி,
